தமிழ�நாட�

இந்து மத சர்ச்சை... ஆ.ராசாவிற்கு எதிர்ப்பு... வியாபாரிகள் கடையடைப்பு

        20

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி அமைப்பின் அழைப்பை ஏற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் உதகையில் இந்து அமைப்பினரின் அழைப்பை ஏற்று 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. காய்கறி சந்தை பகுதியில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. நகைக்கடை, துணிக்கடை என பல்வேறு கடைகள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

கூடலூரில் வியாபாரிகள் கடையடைப்பு பேராட்டத்தில் பங்கேற்க கூடாது என வியாபாரிகள் சங்கம் சார்பில் அனைத்து கடைகளுக்கும் அறிவிப்பானை அனுப்பப்பட்டது. இருப்பினும் அந்த அறிவிப்பானையை மீறி 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் திறக்கப்பட்டன.

குன்னூர் பகுதியில் ஆ.ராசாவிற்கு எதிராக 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. மினிபேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ மற்றும் டாக்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உதகை சாலை, கோவை சாலை,அன்னூர் சாலை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 

கோத்தகிரியில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆட்டோக்கள், மினிபஸ்கள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இறைச்சி, பூ, பழக்கடைகள் போன்றவை திமுகவினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டன. ((இதனிடையே வியாபாரிகளை கட்டாயமாக கடையை மூடச் சொல்லி மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஸிஸ் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. ))

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேயூர், தெக்கலூர், தேவராயன்பாளையம், காசிகவுண்டன்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் வணிகர் சங்கங்களின் அறிவுறுத்தலையும் மீறி பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகளை திறக்கும்படி திமுகவினர் வியாபாரிகளை வற்புறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Share :