தமிழ�நாட�

விசிக கவுன்சிலரை ஆட்டிவைக்கும் திமுகவினர். கைகூப்பி கெஞ்சியதால் பரபரப்பு

        18

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மான பதிவேட்டில் கையெழுத்திட முயன்ற விசிக கவுன்சிலரை திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான விசிக கவுன்சிலர் தனது பதவியை ரிசைன் செய்வதாக திமுகவினரிடம் கைகூப்பி கெஞ்சிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த காட்சியை பார்த்து... தப்பு செய்த யாரோ ஒருவர் வசமாக மாட்டிக்கொண்டு தன்னை விட்டு விடுமாறு கூட்டத்தினரிடம் கெஞ்சி மன்றாடுகிறார் என தவறாக நினைத்துவிட வேண்டாம். மதுராந்தகம் 21வது வார்டு விசிக கவுன்சிலர், தன்னை சுதந்திரமாக பணி செய்ய விடுமாறு கூட்டணி கட்சியான திமுக நிர்வாகிகளிடம் இரு கைகூப்பி வேண்டி கேட்கும் காட்சி தான் இவை..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய ஆலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவரான அதிமுகவை சேர்ந்த கீதா கார்த்திகேயன் தலைமையில் மாதம் மாதம் மாதாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் நடக்கும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீர்மான பதிவேட்டில் கையெழுத்திடாமல் புறக்கணித்து வந்தனர்.

இந்த நிலையில், இம்மாதம் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தீர்மான பதிவேட்டில் 11 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட நிலையில் திமுக கவுன்சிலர்கள் வழக்கம் போல கையெழுத்திடாமல் புறக்கணித்தனர்.

ஆனால், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 21வது வார்டு கவுன்சிலர் அன்பு செல்வன் தீர்மான பதிவேட்டில் கையெழுத்திட முயன்றார். அப்போது, அங்கிருந்த மதுராந்தகம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி கையெழுத்து போடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான விசிக கவுன்சிலர், தனக்கு கவுன்சிலர் பதவியே வேண்டாம் எனவும். பதவியை ரிசைன் செய்கிறேன் தன்னை விட்டுமாறு திமுகவினரிடம் கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Share :