அரசியல�

"செய்த தவறுகளை சுட்டிக்காட்டினால், தாக்குதல் நடத்தும் திமுக" | ஆவேசமாகப் பேசிய சி.வி.சண்முகம்.!

        158

செய்த தவறுகளை சுட்டிக்காட்டினால், அடிப்பது, உதைப்பது,. கொலை செய்வது திமுகவினருக்கு கைவந்த கலை என பகீர் கிளப்பியுள்ளார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம். அத்தோடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எம்.பி. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை சி.வி.சண்முகம் ஒருமையில் கடுமையாக பேசி அதிரவைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய சி.வி.சண்முகம், செய்த தவறுகளை சுட்டிக்காட்டினால், அடிப்பது, உதைப்பது,. கொலை செய்வது திமுகவினருக்கு கைவந்த கலை என்று கூறிய அவர், இருப்பது ஒரு உயிர்தான் என்றும் அது போக வேண்டும் என்றிருந்தால் 2006லேயே போயிருக்கும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் வாய்ச்சவடால் விடும் திமுகவினர் டெல்லி சென்றால் கும்பிடுகிறார்கள் என்று கூறிய அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், இங்கே ஒரு நாடகம், அங்கே ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என்றும் கூறினார். திமுக எம்.பி. கனிமொழியை மத்திய அமைச்சர் அமித்ஷா போனில் நலம் விசாரிப்பதாகவும் அவர் கூறினார்.

கொரோனா காலத்தை அதிமுக சிறப்பாகக் கையாண்டதாகக் கூறிய சி.வி.சண்முகம், திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு உள்ளதாகவும் அதனை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் கூறினார். அரசு மருத்துவமனைகளுக்கான மருந்துகளை கேட்டுப் பெறாமல் சுகாதாரத்துறை அமைச்சர் டவுசர் மாட்டிக் கொண்டு ரோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறார் என்றும் அதற்கு அவர் விளையாட்டுத்துறையை கேட்டு வாங்கி இருக்கலாம் என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.

உயிர் போகவேண்டும் என்றிருந்தால் 2006லேயே போயிருக்கும் என்ற சி.வி.சண்முகம், திமுககாரன் தடியெடுத்தால் நாங்களும் தடியெடுப்போம் அதை தாங்க மாட்டீர்கள் என்றும் பொங்கினார்.


Share :        

VISITORS : 777280