Big Stories

ஐ ஆம் சரண்டர் யுவர் ஆனர்.! கெத்து TTF வெத்து ஆன கதை

        20

ஜி.பி.முத்துவை பின் இருக்கையில் அமரவைத்து, கோவை சிட்டிக்குள்ளேயே 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த பைக் சாகச யூடியூப்பர் டி.டி.எப். வாசன் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப் பதிந்திருக்கும் நிலையில், இனிமேல் அதிவேகமாக பைக் ஓட்டமாட்டேன் தன்னை கைது செய்ய சொல்லி தயவுசெஞ்சு வாழ்க்கையை SPOIL பண்ணிறாதீங்கனு கெஞ்சி மன்றாடியுள்ளார். அத்தோடு ஏற்கனவே போலீசார் வழக்கு போட்ட போது காதலி வீட்டில் தெரிந்து பிரேக்கப் வரை சென்றதாகவும் தற்போது என்ன ஆகப்போகிறது என தெரியவில்லை என்று கெத்து டிடிஎஃ வாசன் வெத்துவாக புலம்பி தீர்த்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு இஷ்டத்துக்கு பைக் ஓட்டிட்டு, வழக்குனு வரும் போது மட்டும் எப்பா எல்லாரும் என்னைய மன்னிச்சிருங்கனு மண்டியிடுவது டி.டி.எப்.வாசனுக்கு வாடிக்கையாகிவிட்டது.

அண்மையில் ஜி.பி.முத்துவை பைக் ரெய்டில் அழைத்துச் சென்ற டி.டி.எப்.வாசன் கோவை நகர் பகுதிக்குள் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திலும், சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பயணம் செய்து வீடியோ போட்டார். அதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க, டி.டி.எப். கையை விட்டுட்டு பைக்கை ஓட்டி பந்தா காட்டினார்.

இந்த வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்த நிலையில், அதிவேகமாக, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது என டி.டி.எப்.வாசன் மீது கோவை போத்தனூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். அத்தோடு, டி.டி.எப். வாசன் மீது பதியப்பட்ட வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஒரு மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், எங்கு போலீசார் கைது செய்துவிடுவார்களோ என பயந்து, மன்னிப்பு கேட்டு மண்டியிட்டிருக்கிறார் டி.டி.எப்.வாசன்.போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு இஷ்டத்துக்கு பைக் ஓட்டிட்டு, வழக்குனு வரும் போது மட்டும் எப்பா எல்லாரும் என்னைய மன்னிச்சிருங்கனு மண்டியிடுவது டி.டி.எப்.வாசனுக்கு வாடிக்கையாகிவிட்டது.

அண்மையில் ஜி.பி.முத்துவை பைக் ரெய்டில் அழைத்துச் சென்ற டி.டி.எப்.வாசன் கோவை நகர் பகுதிக்குள் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திலும், சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பயணம் செய்து வீடியோ போட்டார். அதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க, டி.டி.எப். கையை விட்டுட்டு பைக்கை ஓட்டி பந்தா காட்டினார்.

இந்த வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்த நிலையில், அதிவேகமாக, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது என டி.டி.எப்.வாசன் மீது கோவை போத்தனூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். அத்தோடு, டி.டி.எப். வாசன் மீது பதியப்பட்ட வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஒரு மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், எங்கு போலீசார் கைது செய்துவிடுவார்களோ என பயந்து, மன்னிப்பு கேட்டு மண்டியிட்டிருக்கிறார் டி.டி.எப்.வாசன்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக தான் ஜி.பி.முத்துவை ரெய்டுக்கு அழைத்துச் சென்று வீடியோ எடுத்ததாகவும், இதை தயவுசெய்து யாரும் பெருசு பண்ண வேண்டாம்னு கண்ணீர் வடிக்காத குறையாக கெஞ்சியிருக்கிறார் டி.டி.எப்.வாசன்.

ஏற்கனவே ஒருமுறை போலீசார் வழக்குப்பதிந்த போது தனது காதலி வீட்டில் பிரச்சனை ஆகி பிரேக்கப் ஆகும் நிலைக்கு சென்றுவிட்டதாகவும், இந்த முறை என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ள டி.டி.எப். வாசன், பைக் ரெய்டின் போது ஜி.பி.முத்துவின் முகபாவணைகள் தெரியவேண்டும் என்பதற்காக தான் ஹெல்மெட் கொடுக்கவில்லை என அசட்டுத்தனமாக ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

இனிமேல் இதுமாதிரி வேகமாக பைக் ஓட்டி தவறு செய்யமாட்டேன் என காவல்துறையிடம் மன்னிப்பு கேட்டுள்ள டி.டி.எப்.வாசன், இதுலாம் பயத்துல பேசல பணிவுல தான் பேசுறேனு சீன் போட்டுள்ளார்.

பிரச்சனை வரும் போது மட்டும் மன்னிப்பு கேட்டு தப்பித்துக் கொள்வதை வாடிக்கையாக்கி வைத்திருக்கும் டி.டி.எப்.வாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்று சமூகவலைதளங்கள் மூலம் தவறாக வழிநடத்தும் மற்றவர்களுக்கும் அது பாடமாக அமையும்....


Share :