சென�னை

சோத்துல அரசியலா? அவனையும் போடச் சொல்லு.. போகிறபோக்கில் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்

        20

சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது, தனது மகனின் ஆடம்பர திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நைசாக நழுவிய அமைச்சர் மூர்த்தி, சோத்துல அரசியல் பண்றான், அவனையும் வேணும்னா சாப்பாடு போடச் சொல்லு என போகிறபோக்கில் ஆவேசமாக கூறிவிட்டு சென்றார்.

அட போப்பா.. ஆயிரம் வேலை கிடக்குது... இதெல்லாம் ஒரு கேள்வி.. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்லி என் டைமை வேஸ்ட் பண்ண விரும்பல என்பதுபோல அமைச்சர் மூர்த்தி சட்டென எழுந்து சென்ற காட்சிதான் இது...

2 ஆயிரம் ஆடுகள், 5 ஆயிரம் கோழிகள், 100 கோடி செலவு, 1 லட்சம் பேருக்கு ஹைலெவல் அசைவ விருந்து, திரைப்பட பாணியில் பிரம்மாண்ட செட், தேவாவின் இன்னிசை கச்சேரி என மதுரையில் நடந்த அமைச்சர் மூர்த்தி மகன் திருமண விழா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக அதிமுகவினர்தான் இந்த விவகாரத்தை விட்டபாடில்லை. கிடைக்கும் மேடையெல்லாம், எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசி வருகின்றனர்.

அந்தவகையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் மூர்த்தி என்ன ராஜாவீட்டு பரம்பரையா? அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்தது வந்தது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நல்லாளம் கிராமத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், திமுகவினர் கொள்ளை கும்பல் என்பதற்கு சிறந்த உதாரணமே மூர்த்தி வீட்டு திருமணம்தான். இப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் எங்கு சென்றனர்? கண் தெரியவில்லையா? லஞ்ச ஒழிப்புத்துறை மட்டும் புத்தனா? என கேள்வி எழுப்பினார்.

இதுஒருபுறமிருக்க சென்னை திருவல்லிக்கேணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உங்கள் மகன் திருமணம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு விமர்சனங்கள் கூறி உள்ளாரே, அதற்கு உங்கள் பதில் என்ன? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு முதலில் பதில் சொல்ல மறுத்த மூர்த்தி, ஒருகட்டத்தில் கடுப்பான அவர், அட ஏம்ப்பா... நீங்கவேற.. அவன் சோத்துல அரசியல் பண்றான், வேணும்னா அவனையும் போடச்சொல்லு என காட்டமாக பேசிவிட்டு சென்றார்.

 


Share :