தமிழ�நாட�

ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது.! தலைமை ஆசிரியை பேசும் வீடியோ வைரல்

        14

ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளியில் இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வரவேண்டாம் என தலைமை ஆசிரியை கூறுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்து என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையாக இஸ்லாமிய மக்கள் வசித்து வரும் நிலையில் தலைமை ஆசிரியை இந்து, இஸ்லாமிய மாணவி ஒருவரின் உறவினரிடம், பள்ளியில் சேர்க்கும்போதே தாம் நிபந்தனை விதித்ததாகவும் அப்போது ஒப்புக் கொண்டு இப்போது ஹிஜாப் அணிந்து வருவது ஏன் என கேள்வி எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share :