தமிழ�நாட�

மனம் வேதனையில் துடித்து போனது | அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

        14

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் கதவணை உடைந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அணையிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிற காட்சியை பார்க்கும் போது தனது மனம் வேதனையில் துடித்து போனதாக துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.

விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டிய நீர், அணையின் கதவணை உடைந்ததால் வீணாக கடலை நோக்கி ஆர்ப்பரித்து ஓடும் காட்சிகள்தான் இவை.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரம்பிக்குளம் அணை கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த பருவ மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் அணையின் 3 மதகுகளில் 2வது மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள பெருங்கல் குத்து அணைக்கு சென்று, பின் சாலக்குடி ஆற்றின் வழியாக அரபிக் கடலில் கலந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இந்த நிகழ்வு மிகவும் வருத்தத்துக்குரியது எனவும், எதிர்பாராதவிதமாக செல்ப் வெயிட் கழன்று விழுந்ததால் அணையிலிருந்த தண்ணீர் கட்டுக்கடங்காமல் வெளியேறி வருவதாக தெரிவித்தார்.

இப்படிப்பட்ட விபரீதம் எங்கேயும் ஏற்பட்டதில்லை என குறிப்பிட்ட அவர், அணையிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிற காட்சியை பார்க்கும் போது தனது மனம் வேதனையில் துடித்து போனதாக வருந்தினார்.

 


Share :