அரசியல�

அமைச்சர் சேகர்பாபுவுக்கு காது கேட்கும் கருவி அனுப்பிவைக்கப்படும் - அண்ணாமலை

        14

சர்ச்சை பேச்சுகளால் பிரச்சனைகளை திசை திருப்ப திமுக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை பார்த்து திமுக அமைச்சர்கள் தப்பி ஓடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

ஆ.ராசா குறித்து கேள்வி கேட்டபோது காது கேட்கவில்லை என்று கூறிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு காது கேட்கும் கருவியை அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.


Share :