நடிகை பவுலின் தீபா தற்கொலை | காதலன் சிராஜுதீனிடம் விசாரிக்க முடிவு

        20

சென்னையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த 55 கேள்விகளுடன் தயார் நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாய்தா பட கதாநாயகி பவுலின் தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் கை கூடாததால் தற்கொலை செய்து கொள்வதாக, நடிகை எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய கோயம்பேடு காவல்துறையினர், காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

காரைக்குடியில் படப்பிடிப்பில் உள்ள அவர், சென்னை திரும்பியதும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே நடிகையின் ஐபோன் காணாமல் போனது பற்றி, ஆந்திராவில் உள்ள அவரது சகோதரர் ராஜுவிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.


Share :