இது ஒன்றும் அதிமுக பொதுக்கூட்டம் கிடையாது | டென்ஷன் ஆன ஜெயரஞ்சன்

        176

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்த தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், நியூஸ் ஜெ செய்தியாளர் எழுப்பிய கேள்விகளால் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நியூஸ் ஜெ செய்தியாளர் ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக விலைவாசி குறைந்திருக்கிறது என தாங்கள் கூற வருவதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த ஜெயரஞ்சன், இது ஒன்றும் அதிமுக பொதுக்கூட்டம் கிடையாது என்றார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா? என கேள்வி எழுப்ப கடுப்பான ஜெயரஞ்சன், அதையே நீங்கள் செய்தியாக போட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துவிட்டு எழுந்து சென்றார்.


Share :        

VISITORS : 777054