சென�னை

நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு - அமைச்சர் ஆர்.காந்தி.!

        18

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டாகவும், நெசவாளர்களுக்கான 200 யூனிட் மின்சாரத்தை 300 யூனிட்டாகவும் அதிகரிக்க பரிசீலித்து வருவதாக, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் குளோபல் ஸ்பின் என்ற வர்த்தகக் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், கைத்தறி துறையில் புதுமையான தொழில்நுட்பத்தை புகுத்துவதற்காக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக கூறினார்.

மின்கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவாக உள்ளதாக விளக்கம் அளித்தார்.


Share :