சற�ற�ம�ன�

பேருந்து நடத்துனரை திட்டிய நபர்கள் | தட்டிக் கேட்ட பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்

        20

நாமக்கல் அருகே பேருந்து நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர்களை தட்டிக் கேட்ட பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலச்சிபாளையம் அடுத்த பெரிய மணலியை சேர்ந்த தங்கமணி அவருடைய மகன் பூபாலன் மற்றும் சேகர் ஆகிய மூவரும் காரில் சென்ற போது முன்னால் சென்ற தனியார் பேருந்தை மறித்து வேகமாக செல்ல முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பேருந்து நடத்துனரை மூவரும் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், இதனை அந்த வழியாக சென்ற 2 பள்ளி மாணவர்கள் தட்டிக் கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அந்த பள்ளி மாணவர்களின் சாதி குறித்து இழிவாக பேசியதோடு அவர்களை தாக்கினர்.

இது குறித்து 3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Share :