இந�தியா

இந்தியாவின் பணக்காரர் பட்டியல் | முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளினார் அதானி

        104

இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை முதன் முறையாக பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

எலான் மஸ்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ள அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஐ.ஐ.எப்.எல். நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த ஓராண்டாக கௌதம் அதானி நாள்தோறும் ஆயிரத்து 600 கோடி சொத்து சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானியின் மொத்த சொத்து மதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், அம்பானியை விட அதானியின் சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி முன்னிலையில் இருக்கிறது.

அம்பானியின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 94 ஆயிரம் கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 


Share :        

VISITORS : 777233