இந�தியா

சட்டப்பேரவை கூட்டுவதற்கான உத்தரவு ரத்து | ஜனநாயகம் முடிந்து விட்டதாக கெஜ்ரிவால் விமர்சனம்.!

        20

பஞ்சாப் சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை திரும்ப பெற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவால் ஆம் ஆத்மி அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

ஆபரேஷன் தாமரை மூலம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டிய நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர போவதாக ஆம் ஆத்மி அறிவித்தது.

அதற்காக, பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென அந்த உத்தரவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திரும்ப பெற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், அமைச்சரவை கூட்டிய கூட்டத்தை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? என்றும், ஆகவே ஜனநாயகம் முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.


Share :