இந�தியா

கட்சியின் வாழ்நாள் தலைவராக இருக்க முடியாது | ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்

        18

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார் என செய்தி வெளிவந்த நிலையில், விளக்கம் கேட்டு அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக கெஜன் மோகன் ரெட்டி இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புகளில் உள்ள எந்த ஒரு பதவியும் நிரந்தரம் என்பதற்கு இடம் அளிக்கக்கூடாது என்றும், இது குறிப்பிட்ட இடைவெளியில் கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய விதிகளை மீறிய செயல் எனவும் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மற்ற கட்சிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி இல்லை என்ற தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்து தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Share :