சற�ற�ம�ன�

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு | இரும்பு ஆயுதம், செப்பு பொருட்கள் கண்டெடுப்பு.!

        22

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற 8ம் கட்ட அகழாய்வில் ஆட்டகாய்கள், இரும்பு ஆயுதம், செப்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

கீழடி, அகரம், கொந்தகையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இம்மாத இறுதியில் நிறைவு பெற உள்ளது.

இப்பணிகளில் தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு ஏற்கனவே காதணி உள்ளிட்ட பெண்கள் அழகு சாதன பொருட்கள் கண்டெடுக்கப்படட நிலையில், தற்போது இரும்பு ஆயுதம், செப்பு பொருட்கள் கிடைத்துள்ளது.
 


Share :