கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவேன் | பெண்ணை மிரட்டிய நபர் கைது

        20

சென்னையில் மாடலிங் துறையில் விருப்பம் கொண்ட பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் பதிவிடாமல் இருக்க 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய திருப்பூரை பூர்வீகமாக கொண்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில், வெளிநாட்டில் பணிபுரிய அழகிகள் தேவை என அலைபேசிக்கு வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, அவர்கள் புகைப்படம் கேட்டதன் அடிப்படையில் புகைப்படம் அனுப்பி வைத்ததாகவும், தற்போது புகைபடத்தை இணையத்தில் வெளியிடுவோம் என கூறி திருப்பூரை பூர்வீகமாக கொண்ட ரஞ்சித் என்பவர் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியிருந்தார்.

இதனடிப்படையில் ரஞ்சித்தை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்.


Share :