சற�ற�ம�ன�

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் | ராவணன் மாரடைப்பால் மரணம்.!

        20

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் என அறியப்படும் ராவணன் மாரடைப்பால் மரணமடைந்தார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த ராவணன், சசிகலாவின் சித்தப்பா கருணாகரன் என்பவரது மருமகன் ஆவார்.

அதிமுகவில் சசிகலா செல்வாக்கு மிக்கவராக இருந்த காலகட்டத்தில் கோவை மண்டல அதிமுகவின் அறிவிக்கப்படாத தளபதியாக பணியாற்றி பல்வேறு முக்கிய தலைவர்களை ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டியவர் ராவணன்.

சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கிய போது, இராவணனையும் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார்.

அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ராவணன், திருச்சியில் அவரது மகனின் மருத்துவ உயர் படிப்புக்காக அவருடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.


Share :