இரயிலில் பட்டாகத்தியுடன் சாகசம் காட்டிய மாணவன் - பயணிகள் அலறல்

        20

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பட்டா கத்தியை நடைமேடையில் தேய்த்த படி மின்சார ரயிலில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்ற போது கல்லூரி மாணவர்கள் பலர் கூட்டமாக ஏறினர்.

அதில் ஒரு மாணவர் தான் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து ரயிலில் தொங்கிக்கொண்டு நடைமேடையில் தேய்த்த படி சென்றார்.

பின் கத்தியால் ரயில் ஓங்கி தட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

இந்த நிலையில், அந்த மாணவரை அடையாளம் காணும் பணியில் ரயில்வே போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Share :