Big Stories

Kovai 360 | நடிக்க chance.. பெண்களிடம் ஆசையக்காட்டி அல்வா தந்ததால்.. ஆபத்தில் சிக்கிய யுடியூப் சேனல்

        117

பிராங் என்ற பெயரில் ஏற்கனவே பிளான் போட்டு பெண்களை அழைத்து வந்து வீடியோக்கள் பதிவேற்றி வந்த கோவை 360 யூடியூப் சேனல், வழக்கில் சிக்கி ஒரு மாதம் அமைதியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் வீடியோ பதிவேற்ற தொடங்கியுள்ளது.

பிராங் வீடியோவுக்கு நடிக்க வரும் பெண்களிடம் சினிமாவில் நடிக்கலாம் என ஆசைகாட்டி, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதோடு, அவர்களுக்கு ஒத்த பைசா கூட கொடுக்காமல் கோவை 360 சேனல் ஏமாற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


பிராங் என்ற பெயரில் பப்ளிக் பிளேசில் நான்சென்ஸாக நடந்துக் கொள்ளும் இந்த காட்சிகள் பிளான் பண்ணி எடுக்கப்பட்டது என்றாலும் கூட, அதை பார்ப்போருக்கு நாராசமான உணர்வை தான் ஏற்படுத்துகிறது.

என்ன இப்படியெல்லாம் பண்ணுறாங்கனு பெரியவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வது ஒருபக்கம் இருந்தாலும், இதையெல்லாம் பார்த்து இளம்பெண்கள் விதண்டாவிதமாக ஆசை வைப்பது கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பதும் மறுக்க முடியாதது தான்...

இந்த நிலையில், பிராங்க் செய்வதாக கூறி எதிர்பாலினத்தவரிடம் அநாகரீகமாக நடந்து எல்லை மீறும் செயல்களில் ஈடுபட்ட புகாரில் கோவை 360 யூடியூப் சேனல் சிக்கியது.

ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களை வைத்துள்ள இந்த சேனலின் ஒவ்வொரு வீடியோவும் நான்கைந்து மில்லியன் வியூவ்ஸ்களை பெற்றிருக்கும் நிலையில், அதனை வைத்து லட்சம் லட்சமாக சம்பாதித்து வந்த உரிமையாளர் குரு தேவன் மீது வழக்கும் பாய்ந்தது.

வழக்கில் சிக்கி ஒரு மாதமாக அமைதியாக இருந்த கோவை 360 சேனல் மீண்டும் வீடியோ போட தொடங்கியுள்ளது. மழை பெய்யும் போது பெண்களின் குடைக்குள் புகுந்து குடைச்சல் கொடுப்பது போன்று பிராங்க் எடுத்து புதிதாக வீடியோ அப்லோடு செய்துள்ளது.

பொதுமக்கள் புகார் கொடுத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவை 360 சேனலை காவல்துறை முடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விளக்கம் மட்டும் கேட்டு பிரச்சனையை முடித்து வைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிராங் வீடியோக்களுக்கு நடிக்க வரும் இளம்பெண்களிடம் சினிமாவில் நடிக்கலாம் என்ற ரேஞ்சுக்கு ஆசைகாட்டி அழைத்து வருவதோடு, நடித்து கொடுத்த பிறகு ஒரு பைசா கூட கொடுக்காமல் கோவை 360 சேனல் டாடா காட்டி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதையும் மீறி யாராவது நடித்து கொடுப்பதற்கு காசு கேட்டாலும் கூட அதுதான் உங்கள பிரபலப்படுத்துறோம்லனு சொல்லி சரிகட்டிவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி, பணத்துக்காக பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு கடைசியில் நியூஸ் சேனல்கள் தான் தப்பா நியூஸ் போட்டுவிட்டதாக பொங்கியிருக்கிறார்

கோவை 360 யூடியூப் சேனலின் உரிமையாளர் குரு தேவன். அத்தோடு, இது எல்லாமே முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம் தான்...யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல என டி.டி.எப். வாசன் மாதிரி வினோத விளக்கம் கொடுத்துள்ள குரு தேவன், இனிமேல் வழக்கம்போல் வீடியோ போடுவோம் என தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்குவதோடு மட்டுமில்லாமல் அதற்கு புதுசு புதுசா விளக்கத்தை கொடுத்து, தப்பித்துக் கொள்ளும் கோவையன்ஸான டி.டி.எப்.வாசன்,. குரு தேவன் உள்ளிட்டோரின் அட்ராசிட்டியை காவல்துறை அடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.


Share :        





VISITORS : 171572