Big Stories

'டிக்கெட் கேட்டால் கொடுங்கள்" - ஒரு வார்த்தையால் வந்த விளைவு | Ponmudi

        77

''ஓசியிலதானே போறீங்கனு'' அமைச்சர் பொன்முடி பேசியதின் பின்விளைவு, இனிமேல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் யாரும் டிக்கெட் கேட்டால் உடனடியாக கொடுத்து விடுமாறு நடத்துநர்களுக்கு ரகசிய வாய்மொழி உத்தரவு பறந்திருக்கிறது. அப்படி எதுவும் உத்தரவு கொடுக்கவில்லை என தமிழ்நாடு போக்குவரத்து கழகமும் அமைச்சர் சிவசங்கரும் மறுத்துள்ளனர். ஆனால் தங்களுக்கு பெண்கள் கட்டணமில்லா டிக்கெட் வாங்க மறுத்தால் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் பேசியுள்ள செல்போன் உரையாடல் .
அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு வந்த எதிர்வினைகளும், விமர்சனங்களும் ஏராளம்... ஓசியிலதானே போறீங்கனு அமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும்,

பொதுமக்களே பொங்கி எழுந்து இனிமேல் ஓசியில் போகமட்டோம்....டிக்கெட் கொடுங்கள் என நடத்துநர்களிடம் சண்டையிட்டு போர்க்கொடி தூக்கியது பரபரப்பின் உச்சமாக இருந்தது.
இதன் விளைவாக, இனிமேல் பெண்கள் யாரேனும் டிக்கெட் கேட்டால் எதுவுமே சொல்லாமல் காசு வாங்கிக் கொண்டு கொடுத்துவிடுமாறு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.

இலவசமாக பயணிக்க விரும்பாமல் பணத்தை கொடுத்து பெண்கள் யாராவது டிக்கெட் கேட்டால் உடனடியாக கொடுத்து விடுமாறும் நடத்துநர்களுக்கு ரகசியமாக அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சுற்றிக்கை மூலம் இலவசமாக பேருந்தில் பயணிக்க விரும்பாத பெண்கள், இனிமேல் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதும் அப்படி எதுவும் ரகசிய உத்தரவு கொடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் கூட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என கூறியுள்ளார். ஆனால், போக்குவரத்து கழகத்தின் அதிகாரி ஒருவர் நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் பேசும் போது, பெண்கள் யாரேனும் டிக்கெட் கேட்டால் உடனடியாக நடத்துநர்கள் கொடுத்துவிடலாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருப்பதாக ஒப்புக் கொள்கிறார்.


திமுக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக இருந்த மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அமைச்சரின் ஒருவார்த்தை ஒட்டுமொத்த திட்டத்திற்கே கரும்புள்ளியாக மாறிவிட்டது.

அதன் விளைவாக தான் கடைசியில் பெண்கள் யாரேனும் டிக்கெட் கொடுத்தால் மறுக்காமல் கொடுத்துவிட வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 


Share :        





VISITORS : 171674