Big Stories

வெற்றிமாறனுக்கு பதிலடியும்...! ஆதரவும்...! கொந்தளித்த குஷ்பூ, கைகொடுத்த கருணாஸ்..!

        97

ராஜராஜசோழனை இந்துவாக அடையாளப்படுத்தும் முயற்சி நடப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்துக்கு பதிலளித்துள்ள நடிகை குஷ்பூ, வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

அதே சமயம், வெற்றிமாறன் பேசியது சரி தான் என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இப்படி வெற்றிமாறன் பேசியது சரிதான் என இடதுசாரிகள், திராவிட இயக்கத்தினர் பலர் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது என கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும் அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது என கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேசமயம், பாஜகவினர், வலதுசாரி ஆதரவாளர்கள் வெற்றிமாறன் பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை குஷ்பூ வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ஒன் வே திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ செய்தியாளர்களை சந்திக்கையில் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது துர்தருஷ்டம் என விமர்சித்ததோடு, வெற்றிமாறனின் பார்வையில் தான் பிரச்சனை இருக்கிறது எனவும், அவருடைய பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.


முன்னதாக இசைவெளியீட்டு விழாவிலும் பல சுவாரஸியமான நிகழ்வுகள் அரங்கேறின. குஷ்பூ பேசி முடித்துவிட்டு புறப்படும் போது தடுத்து நிறுத்திய தயாரிப்பாளர் கே.ராஜன் தன்னுடைய பள்ளிக்கு குஷ்பூ பணம் கொடுத்து உதவியதாகவும், குஷ்பூவின் தர்ம குணத்தை பார்த்து வியந்துவிட்டதாக புகழ்ந்து பேசினார்.

அப்போது பேசிய நடிகை குஷ்பூ குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்கமுடியாமல் போய்விட்டதால், கல்விக்காக யார் என்ன உதவி கேட்டாலும் செய்துவிடுவேன் என்ற குஷ்பூ, படிப்பு தான் எல்லோருக்கும் முக்கியம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், கிழக்கு வாசல் படத்தில் தமிழ் சரியாக பேசாததால், பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு மும்பைக்கு கிளம்பச் சொன்னதாக கூறினார்.

இப்படி சொன்னதும் உடனடியாக மறுநாளே எல்லா வசனத்தையும் மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பேசியதாகவும் புகழ்ந்து பேசினார்.
 

 


Share :        





VISITORS : 171552