Big Stories

முதலமைச்சர் ஐயா காப்பாத்துங்க...! | பாத்ரூமில் படுப்பதாக கதறும் பெண்...!

        71

குழந்தையை பராமரிக்கத்தானே என நினைத்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர், ஹவுஸ் ஓனர் தன்னை பாத்ரூமில் தங்க வைத்து மூக்கில் இருந்து ரத்தம் வரும்வரை 20 மணி நேரம் வேலை வாங்குவதாகக்கூறி கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஐயா என்னை காப்பாத்துங்க, நான் இனிமேல் இங்கு இருந்தால் செத்துதான் போவேன், என் 2 பெண் குழந்தைகளும் அனாதையாகிவிடும் என கண்ணீர் வடித்துள்ளது காண்போரையும் கலங்க வைத்துள்ளது.

இப்படி கதறி அழும் தாயின் குரல் அரசுக்கு கேட்க வேண்டும், தாய்நாட்டுக்கு திரும்பி வந்து தனது குழந்தைகளோடு இந்த தாய் நிம்மதியாக வாழ வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.


சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்பாலுக்கு புவனா என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 4 லட்சம் கடன் இருந்ததால், கடனை அடைப்பதற்காக வெளிநாட்டிற்கு சிறிதுகாலம் வேலைக்கு செல்லலாம் என நினைத்த புவனா சூளைமேட்டில் உள்ள ஏஜென்ட் ஜான்சன் என்பவரை அணுகி உள்ளார்.

அப்போது, குவைத்தில் குழந்தையை பராமரிக்கும் வேலை உள்ளது, மருத்துவ பரிசோதனைக்காக 10 ஆயிரம் ரூபாயை மட்டும் செலுத்தினால் மட்டும் போதும் என பணத்தை பெற்றுக்கொண்டு புவனாவை குவைத்திற்கு அனுப்பி வைத்தார்.

கடனை அடைத்து நிம்மதியாக இருக்கலாம் என்ற நினைப்பில் குவைத் சென்ற புவனா, தனக்கு ரத்த கண்ணீர்விடும் நிலை வரும் என கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்.

குவைத்தில் உள்ள ஒரு வீட்டில் பணியில் சேர்ந்த புவனாவுக்கு, ஹவுஸ் ஓனர் சொன்னபடி ஊதியம் கொடுக்காமல் குறைந்த அளவிலே ஊதியம் கொடுத்ததோடு, உணவுகூட சரிவர கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளார்.


இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள புவனா, வீட்டின் உரிமையாளர் தினமும் 20 மணிநேரம் தன்னை வேலை வாங்குகின்றனர். அதுமட்டுமல்லாது, பாத்ரூமில்தான் நான் படுத்து தூங்குகிறேன், அடித்துக் கொடுமைப்படுத்தி தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர்.

முதலமைச்சர் ஐயா தயவுசெய்து என்னை காப்பாத்துங்க, எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் நான் இங்கு இருந்தால் செத்துதான் போவேன், என் குழந்தைகள் அனாதையாகிவிடும் என கதறி அழுது கண்ணீர் வடித்துள்ளார்.


இதேபோல் புவனாவின் கணவர் ஜேம்ஸ்பால், தனது மனைவி தங்கி வேலைசெய்துவரும் வீடு, அந்நாட்டின் காவல் அதிகாரியின் வீடு என்பதால் எப்படி வெளியே வருவது? வந்தால் திருட்டுபட்டம் கட்டிவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளார் எனவும் தன் மனைவியை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புவனாவை மீட்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகூறிவரும் பலரும் இதுபோல போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டில் மாட்டிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share :        





VISITORS : 171720