Big Stories

துர்மதத்தில் இருந்து விலகுங்கள்..! | மோகன் சி லாசரஸின் அட்ராசிட்டி..! | Mohan. C. Lazarus

        232

இந்துக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்திருந்த மத போதகர் மோகன் சி லாசரஸ், தற்போது மீண்டும் சடங்கு, சம்பிரதாயம், பாரம்பரியம் எனக் கூறி துர்மதத்தில் இருக்காமல் அந்த மதத்தைவிட்டு வெளியே வாருங்கள் என பேசியிருக்கிறார்.

ஒரு பக்கம் தீராத வியாதிகளை தீர்த்து வைப்பதாக புருடா விட்டு வரும் மோகன் சி லாசரஸ், மற்றொரு பக்கம் பணம் சம்பாதிக்க சொந்தமாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை வைத்து கோடி கோடியாக சம்பாதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


இவ்வளவு நேரம் கூப்பாடு போட்டு அழுதும் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராத அப்பவே தெரிந்திருக்கும்... இவர் நடிகர் திலகம் சிவாஜிக்கே டப் கொடுக்கும் மகா நடிப்புக்காரர் என்று...


சில வருடங்களுக்கு முன் இந்தியாவிலேயே சாத்தானின் அரங்குகளான கோவில்கள் தமிழகத்தில் தான் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக கும்பகோணத்தில் எங்கு திரும்பினாலும் சாத்தானின் கூடாரமான கோவில்கள் இருப்பதாகவும் கூறி ஒட்டு மொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளானவர் தான் இந்த மத போதகர் மோகன் சி லாசரஸ்.
இந்து மதத்தை போலவே கிறிஸ்தவ மதத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பின்பற்றுகின்றனர்.

அனைத்து மதமும் சமம். எம்மதமும் சமம் என வாழ்ந்து வரும் தமிழகத்தில் ஒரு மதத்தை தூக்கிப்பிடிக்க இன்னொரு மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருபவர் மோகன் சி லாசரஸ்.

இப்படி இந்து மதத்தை சாத்தானின் மதம் என்கிற ரீதியில் லாசரஸ் பேசியதால் தமிழகமே மத வேறுபாடு இல்லாமல் கொந்தளித்தது. கிறிஸ்தவர்கள் கூட அது எப்படி சகோதர மதத்தை சாத்தான் மதம் என்று சொல்லலாம் என லாசரசை வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர்.

இதனால் அப்படியே சரண்டர் ஆன மோகன் சி லாசரஸ் நீதிமன்றம் சென்று மன்னிப்பு கேட்டு பின்னங்கால் பிடறியில் பட ஓடி தண்டனையில் இருந்து தப்பினார்.


இந்த நிலையில், அற்புத பெருவிழா என்ற பெயரில் நடந்த பிரார்த்தனை கூடத்தில், பாவங்களின் புகலிடமாக இருக்கும் மதங்களை விட்டுட்டு கிறிஸ்தவ மதத்தை நோக்கி வாருங்கள் என மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியிருக்கிறார்.

மற்ற மதங்கள் எல்லாம் துர்மதங்கள் என விமர்சித்திருக்கும் மோகன் சி லாசரஸ், அந்த மதத்தில் இருப்பவர்கள் இனிமேல் ஆவது மனம் திருந்தி கிறிஸ்தவ மதத்திற்கு வர வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.


தமிழகத்தில் அற்புதவிழா நடத்தும் மோகன் லாசரஸ், துர் மதங்களில் இருந்து வெளியே வர வேண்டும் என்று வெளிப்படையாக பேசுகிறார்.

எந்த மதம் துர் மதம் என்று மோகன் சி லாசரஸ் கூறவில்லை. ஆனால் அவர் கூட்ட அரங்கம் நடத்துவது தமிழகத்தில். எனவே அவர் தமிழகத்தில் பெருவாரியாக பின்பற்றக்கூடிய இந்து மதத்தையும், அதன் பிறகு அதிகம் உள்ள இஸ்லாமிய மத்தையும் துர் மதம் என்று கூறியிருக்கலாம் என்கிறார்கள்.


மோகன் சி லாசரஸ் இந்த அளவிற்கு ஆக்ரோசமாக மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட காரணம் அவருக்கு கோடி கோடியாக வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி தான் என்கிறார்கள்.

இப்படி பணத்திற்காக தமிழகத்தில் அண்ணன் தம்பிகளாக வாழும் இந்து - முஸ்லீம் - கிறிஸ்தவர்கள் இடையே பகைமை உணர்வை ஏற்படுத்தும் வகையில் மோகன் சி லாசரஸ் பேசுவதற்கு யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது என்கிற கேள்வி எழுந்து வருகிறது.
இப்படி மதமாற்றம் செய்து வெளிநாட்டு நிதியை மோகன் சி லாசரஸ் பெறுவது ஒருபுறமிருக்க, தீராத வியாதிகளையும் தனது ஜெபத்தால் தீர்த்து வைப்பதாக கலர் கலராக ரீல் விட்டு அப்பாவி ஏழை மக்களிடம் இருந்து காணிக்கை என்கிற பெயரில் சில்லரை பார்த்து வரும் மோகன் சி லாசரசின் சில்லரைத்தனமும் அம்பலமாகியுள்ளது.

எப்படி என்றால் மூட்டு வலியால் முடங்கி கிடந்தவர் மோகன் சில லாஸரசின் ஒரே ஜெபத்தால் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாராம். யார்ரா சொன்னது இது? என நீங்கள் கேட்கலாம்? அதற்கு தளபதி படத்தில் தேவாவே சொல்லிட்டான் என்பது போல் மோகன் சி லாசரஸ் தன் ஜெபத்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருவதாக கதை விடும் வீடியோ இது.


இதையெல்லாம்விட உச்சமாக செல்போனில் ஜெபம் செய்தே மூன்று கேன்சர் கட்டிகளை காணாமல் ஆக்கியிருக்கிறாராம் மோகன் சி லாசரஸ்...மருத்துவர்கள் கைவிரித்தும் கூட, இயேசுவின் அற்புதத்தால் தான் கேன்சர் கட்டி காணாமல் போய்விட்டதாக அதிர வைத்துள்ளார் மோகன் சி லாசரஸ்.

அதோடு மட்டும் இல்லாமல் பெண் ஒருவரை மேடை ஏற்றி அந்த பெண்ணையே வாக்குமூலம் கொடுக்க வைத்து அங்கிருந்தவர்களிடம் applause வாங்கி கொண்டார்.


ஒவ்வொரு நோய்க்கு மருந்து, மாத்திரை கண்டுபிடிக்க இரவு, பகலாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் பாடுபட்டுக் கொண்டிருக்க, இப்படி வாயால் வடை சுட்டு மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி மூடநம்பிக்கையில் தள்ளி முட்டாள் ஆக்கும் மோகன் சி லாசரஸ் போன்றவர்களை பார்க்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது....


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தொட்டால் போதும்...பார்த்தால் போதும்...ஜெபம் செய்தால் போதும் அற்புதம் நிகழும்...அதிசயம் நிகழும் என அளந்துவிட்ட இந்த மோகன் சி லாசரஸுக்கே சொந்தமாக ஒரு மருத்துவமனை இருக்கிறது என்பது தான்...

இந்த பக்கம் நோய்கள் குணமாக காரணம் எல்லாமே கிருபை தான் என மக்களை கிறுக்கனாக்கி அலையவிட்டுட்டு, தூத்துக்குடி பக்கம் பெரிய அளவில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி கட்டுக்கட்டாக பணம் சம்பாதித்து வருகிறார்.

.
ஒரே ஜெபத்தில் எந்த நோயாக இருந்தாலும் பறந்துவிடும் என பச்சை பச்சையாக அளந்துவிடும் மோகன் சி லாசரஸ், அப்புறம் எதுக்கு மருத்துவமனை கட்டனும், அங்கு எதற்காக மருத்துவர்களை நியமிக்கனும்னு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


உனக்கு வாயில தான் சனி என்ற சினிமா பட வசனத்தை கேள்விபட்டிருப்போம்...அதேமாதிரி தான் மோகன் சி லாசரஸும் பாஸ்டர்களை பற்றி பேச வந்து கடைசியில் மல்லாக்க படுத்து எச்சியை காரித் மூஞ்சியில் துப்பிக் கொண்ட கதையாக மாறிவிட்டது.

இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய மோகன் சி லாசரஸ் சில மதபோதகர்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரை வைத்து பண கொள்ளையில் ஈடுபடுவதாகவும், பணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே சில பாஸ்டர்கள் சபை நடத்துவதாகவும் யோக்கியவான் போல் பேசினார்.


இந்த வீடியோவை பார்த்ததும் மோகன் சி லாசரஸை ஐயாதுரை ரேஞ்சுக்கு நினைக்கத் தோன்றும்... அதுதான் இல்லை... சில நாட்களுக்கு முன் அவரே ஒரு ஜெப கூட்டத்தில் எவ்வளவு காசு கொடுக்கிறீர்களோ அவ்வளவு தான் கர்த்தர் உங்களை ஆசிர்வர்திப்பார் என கூச்சமே இல்லாமல் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வெள்ளை வேஷ்டி எல்லாம் ஊருக்குத்தான் என்பதை புரியவைத்துள்ளது.

தலைவன் கை வைக்காத இடமே இல்லை என்பது போல, ஜெபக்கூட்டத்தில் அரசியல் டாப்பிக்கையும் பேசி வழிய வந்து WANTED லிஸ்டில் ADD ஆகியிருக்கிறார்.

90சதவீத அரசியல்வாதிகள் லஞ்சம், ஊழல் என திளைத்து வருவதாக பேசியிருக்கும் மோகன் சி லாசரஸ், தனது மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அரசியல்வாதிகளை அழைத்து திறக்க வைத்ததோடு, அவர்கள் எல்லாம் தேவனின் தூதர்கள் என புகழ்ந்து தள்ளியது தான் மோகன் சி லாசரஸின் அட்ராசிட்டிக்களில் தனி ரகம்.

ஏசுவை நினைத்து மனதார ஜெபம் செய்தால் தீராத நோய்கள் மட்டும் அல்ல தீராத மனப்பிரச்சனைகளும் தீரும் என்கிற நம்பிக்கையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.

ஆனால் ஜெபம் செய்வதாக கூறிஅப்பாவி மக்களை ஏமாற்றி காணிக்கை என்று பணத்தை வசூல் செய்வது, குடிகாரன் பேச்சு விடிஞ்சாதான் போச்சுனு சொல்லுவாங்க...

ஆனால் மோகன் சி லாசரஸ் போன்றோரின் பேச்சுகள் மதவெறியை உருவாக்கி, நஞ்சை விதைத்து பிரிவினையை உண்டாக்கும் வகையில் இருக்கிறது.

இங்கு ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு இஷ்டமான கடவுளை வணங்கவும், நம்பிக்கை வைக்கவும் உரிமை உண்டு... மற்றொரு மதத்தை தரக்குறைவாக பேசி, மதமாற்றத்திற்கு முயற்சிக்கும் மோகன் சி லாசரஸ் போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 


Share :        





VISITORS : 171668