���������������������������

"அப்பா, நாம் செத்துவிடலாமா?" 8 வயது மகளை கொன்ற தந்தை | மனைவி நடத்தையில் சந்தேகம்.!

        87

மனைவி மீதான சந்தேகப் புலம்பலைக் கேட்டு ''அப்பா, நாம் இருவரும் செத்து விடலாமா?'' எனக் கேட்டதாகக் கூறி 8 வயது மகளைக் கொன்று சடலத்தை பரண் மீது ஒளித்து வைத்த தந்தை, ரயில் முன் பாயச் சென்று, பின் பயத்தால் செய்வதறியாது மதுரையில் சுற்றித்திரிந்த போது கைது செய்யப்பட்டார்.

இவர்தான், எந்தத் தவறும் செய்யாத தான் பெற்ற 8 வயது மகளை துளியும் அச்சமின்றி கொன்றுவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடியாது அலைந்த நபர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சோலை அழகுபுரம் வஉசி 3-வது தெருவில் வசித்து வந்த டெய்லர் காளிமுத்து-பிரியதர்ஷினிக்கு மகளாகப் பிறந்தவர் தன்ஷிகா.

பிரியதர்ஷினி கீழவாசலில் பாத்திரக்கடையில் வேலை செய்து வரும் நிலையில், கணவன் அவரை அடிக்கடி சந்தேகித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவிக்க, போலீசார் வந்து பார்த்தபோது தன்ஷிகா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாளியில் போட்டு பரணில் அழுகிய நிலையில் சடலமாக வைக்கப்பட்டிருந்தார்.


சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தந்தை காளிமுத்து மீது சந்தேகமடைந்த போலீசார் அவரைத் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் வியாழனன்று அதிரடியாக கைது செய்து விசாரித்ததில் தான் தான் தனது மகளைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

மனைவி மீது சந்தேகம் இருந்ததாகவும், அதைக் கூறி மகளிடம் அழுதபோது நாம் இருவரும் இறந்துவிடலாம் என மகள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுப்பங்கரையில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பரணில் வைத்த பின்னர் வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்து பயத்தின் காரணமாக மதுரையில் சுற்றி திறிந்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தம்பி வீட்டில் குழந்தையை விடுவதாகக் கூறியிருந்ததாகவும், தானும் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தாய் பிரியதர்ஷினி குறிப்பிட்டுள்ளார்.


Share :        

VISITORS : 171661