Big Stories

Conference-யில் காத்திருந்த அதிர்ச்சி..Kiss கொடுத்து வெறுப்பேத்திய அன்ஷிதா.? என்ன தான் நடந்தது.?

        163

செல்லம்மா சீரியல் நாயகி அன்ஷிதாவை திருமணம் செய்து கொள்வதற்காக தனக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கணவர் அர்ணவ் கதை கட்டி விடுவதாக கேளடி கண்மணி சீரியல் நடிகை திவ்யா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னுடன் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து தன்னை கர்ப்பமடைய வைத்துவிட்டு தற்போது வேறோரு நடிகையை கரம் பிடிப்பதற்காக தனது கருவை அழிக்க கணவர் முயல்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.


கணவன் தன்னை ஏமாற்றி விட்டு செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவை கரம்பிடிக்க முயல்வதாகவும் இருவரும் போனில் கிஸ் கொடுத்து தன்னை வெறுப்பேற்றுவதாகவும் நடிகை திவ்யா புலம்பும் காட்சிகள் தான் இவை.


கேளடி கண்மணி சீரியல் நடிகை திவ்யாவும், அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் அர்ணவும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் திவ்யா கர்ப்பமானார்.

இதனையடுத்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய திவ்யாவை அர்ணவ் திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில நாட்களிலேயே இவர்களது இல்லற வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு அர்ணவ் தன் வயிற்றில் எட்டி உதைத்த காரணத்தினால் தனது 2 மாத கரு கலையும் நிலையில் உள்ளதாகவும் கண்ணீர் மல்க மருத்துவமனையில் இருந்து திவ்யா வீடியோ வெளியிட்டார்.

இதனை முற்றிலும் மறுத்த அர்ணவ், ஈஸ்வரன் என்பவருடன் தனது மனைவி திவ்யா நெருங்கிப் பழகி வருவதாகவும் அதனாலேயே கருவை கலைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பகீர் தகவலை வெளியிட்டார்.

அர்ணவ்வின் பதிலடியை மறுத்த திவ்யா, வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகிவிட்டு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவுக்கும் தனது கணவருக்கும் கடந்த 4 மாதங்களாக தவறான உறவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்


மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஒரு அறையில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், இதுகுறித்து தன் கணவரிடம் கேட்ட போது வாட்டர் பாட்டிலை வயிற்றில் எறிந்து விட்டதாக திவ்யா தெரிவித்தார்.


இதனையடுத்து தனது கணவரும், அன்ஷிதாவும் தனக்கு போன் போட்டு கெட்ட வார்த்தைகளில் திட்டுவதாகவும், கான்பிரன்ஸ் காலில் அன்ஷிதா தனது கணவரிடம் ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்து தன்னை வெறுப்பேற்றுவதாகவும் பேசினார்.

மேலும் தனது பெற்றோர்களும் கைவிட்டு விட்டதாகவும், தன்னிடம் சாப்டியா என்று கேட்பதற்கு கூட ஆள் இல்லாமல் தினமும் நொந்து நொந்து வாழ்வதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அத்தோடு, அன்ஷிதாவுடன் தான் வாழ்வேன் என்றும், அவளுக்கு லிப் கிஸ் கொடுத்து அதை போட்டோ எடுத்து உனக்கு அனுப்புகிறேன் என தனது கணவர் மிரட்டுவதாக கூறினார்.

மேலும் நீ கர்நாடக பொன்னு, நான் தமிழ்நாடு என்னை உன்னால் ஒன்று செய்யமுடியாது என ஆணவ தொனியில் பேசுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


Share :        





VISITORS : 171666