ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் 80 சதவீதம் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதாகவும், மின்சார வாரியத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.