Big Stories

"நான் இறந்துவிட்டால் கல்லூரி முதல்வர்தான் காரணம்" கண்ணீர் விட்டுக் கதறிய பேராசிரியர்.!

        207

நான் இறந்துவிட்டால் அதற்கு கல்லூரி முதல்வர்தான் காரணம் என பேராசிரியர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவிற்கு கல்லூரி முதல்வரால் பேராசியர் பல்வேறு துன்பங்களையும் அனுபவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாமக்கல் - திருச்சி சாலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் இந்தக் கல்லூரியின் முதல்வராக பால் கிரேஸ் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியில் உள்ள கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில் முதல்வராக பணியாற்றியபோது முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றியது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை தரக்குறைவாகப் பேசியது போன்ற விவகாரங்களில் பால் கிரேஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை பெற்ற பால் கிரேஸ் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில்தான் முதல்வர் பால்கிரேஸ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கல்லூரியின் வணிகவியல் துறையில் தலைமை பேராசிரியராக நல்லுசாமி என்பவர் பணிபுரிகிறார். தனது துறையில் பயிலும் மாணவிகளின் இண்டர்ன்ஷிப்புக்கு கையெழுத்து வாங்க கல்லூரி முதல்வர் பால் கிரேஸை நல்லுசாமி சந்தித்தார். அங்கே நல்லுசாமியை கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கையெழுத்து போட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வணிகவியல் துறை மாணவிகளும் தலைமை பேராசிரியர் நல்லுசாமியும் காலை முதல் மாலை 6மணி வரை கல்லூரி முதல்வர் பால் கிரேஸின் அலுவலக வாயிலிலேயே நின்று கொண்டிருந்தனர். 6 மணிக்கு மேல் மாணவிகளை மட்டும் உள்ளே அழைத்த முதல்வர் பால் கிரேஸ், துறை தலைவர் நல்லுசாமிக்கு எதிராக மிரட்டி கடிதம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் நின்ற துறை தலைவர் நல்லுசாமி மாணவிகள்முன்னிலையிலே கண்ணீர் விட்டு அழுதார்.


கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு நல்லுசாமிதான் காரணம்
எனக் கூறி அவரை ஒருமையில் பேசி பழி வாங்கும் நோக்கத்துடன் முதல்வர் பால் கிரேஸ் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கு எதிராக கெளரவ பேராசிரியர்களை தூண்டி விட்டு பிரச்சினையை உருவாக்குகிறார் எனக் குற்றம் சாட்டிய நல்லுசாமி, தான்
இறந்தால் அதற்கு கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் தான் காரணம் எனக் கூறி கண்கலங்கியபடியே கல்லூரியை விட்டு சென்றார்.


Share :        





VISITORS : 363289