Big Stories

தண்டவாளத்தில் விரிசல் - விபத்து தவிர்ப்பு பல உயிர்களை காப்பாற்றிய இளம்பெண்.!

        185

கடலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஸ்டேசன் மாஸ்டரிடம் இளம்பெண் கூறியதால் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் பெரும் விபத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்த இளம்பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், கடலூர் ரயில்வே போலீசார் நேரில் சென்று பாராட்டு தெரிவித்துள்ளர்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் மஞ்சு. சிறுவயதில் இருந்தே மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திக்கி திக்கி பேசி வந்த இருவருக்கு தியாகராஜன் என்ற கணவரும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மஞ்சு, உடனே சேந்தமங்கலம் ரயில் நிலையத்திற்கு அருகில் வசித்து வரும் அவருடைய அக்கா சத்யாவிற்கு இதனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறினார்.

இந்த தகவலை சத்யா உடனே சேந்தமங்கரம் ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் கூறிய நிலையில், இதனை நம்பாத ஸ்டேசன் மாஸ்டர் தண்டவாள விரிசலை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்புங்கள் என கூறினார். பின்னர் மஞ்சு செல்போனில் தண்டவாள விரிசலை புகைப்படம் எடுத்து சத்தியாவிற்கு அனுப்பிய நிலையில், அதனை ஸ்டேசன் மாஸ்டர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே திருத்துறையூர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்த நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் அவசர, அவசரமாக திருத்துறையூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர்.

இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் 1 மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அதன் பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் முழுமையாக சரிசெய்யப்பட்டது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், உரிய நேரத்தில் யோசித்து தகவலை ஸ்டேசன் மாஸ்டரிடம் கொண்டு சென்ற மஞ்சுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இதனை அறிந்த கடலூர் ரயில்வே போலீசார் மஞ்சு வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Share :        





VISITORS : 363074