Big Stories

6-வது விரல் ஆளுநர்.. வெட்டி எறியணும்.! த்தூ..! காரி உமிழ்ந்து சீமான் படு டென்சன்!

        210

 ஒட்டு மொத்த ஓட்டையும் ஒரே ஆளு போடுறான்.. இத வெற்றின்னு சொல்ல வெக்கமா இல்லயா? இதற்கு தூக்கில் தொங்கலாம் அல்லது விஷம் குடித்து சாகலாம் என குஜராத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கால் கிலோ எச்சிலை காரி உமிழ்ந்து அதிர வைத்தார். அத்தோடு கையில் 5 விரலுக்கு அருகே தேவையில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் ஆறாவது விரல்தான் ஆளுநர், அந்த விரலை ஒண்ணு ஒடிக்கணும் அல்லது வெட்டி எறியணும் எனக் கூறி சீமான் ஆவேசமாக பேசினார்.

அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குஜராத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவு சொல்கிறதே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, தேர்தல் எப்படி நடந்தது என்ற வீடியோவை நான் அனுப்பவா? என கொந்தளித்தார் சீமான்..

குஜராத்தில் பாஜக பெறுவது ஒரு வெற்றியா? அந்த வெற்றிக்கு தூக்குல தொங்கலாம் அல்லது விஷம் குடித்து சாகலாம் என்றார். அப்படியும் ஆத்திரம் தீராத நிலையில், த்தூ... கேவலம்.. ((படிக்கும்போது கொஞ்சம் அழுத்தமாக சொல்லவும்)) என பாஜக வெற்றியை நோக்கி காரி உமிழ்ந்தார்.

ஒட்டு மொத்த ஓட்டையும் ஒரே ஆளு போடுறான்.. இத வெற்றின்னு சொல்ல வெக்கமா இல்லயா? இதுல மீடியாவ கூப்பிட்டு வேற நாங்கள் 8 ஆவது முறை வெற்றி பெறுவோம் என பீத்திக் கொள்கின்றனர் என்றார் சீமான். 8 ஆவது முறை இல்லை 80 ஆவது முறைகூட ஜெயிச்சுட்டுப்போ.. ஆனா அது கேவலம்தான் என வழக்கமான நக்கல் சிரிப்பு சிரித்தார் சீமான்.
BREATH

ஆளுநருக்கும்-அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லாதவர், கையில் 5 விரலுக்கு அருகே தேவையில்லாமல் தொந்தரவாக நீட்டி கொண்டிக்கும் 6 ஆவது விரல்தான் ஆளுநர். அந்த விரலை ஒண்ணு ஒடிக்கணும் இல்ல வெட்டி எறியணும் என்றார்.

அவன் அவனுக்கு இருக்க இடமில்லாமா பஞ்சா பறந்து கொண்டிருக்கும்போது, 600 ஏக்கர் பரப்பளவில் ஆளுநருக்கு எதுக்கு அந்த மாளிகை? என கேள்வி எழுப்பிய சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது ஆளுநர்கள் இருந்த இடம் தெரியவில்லை என்றதோடு, தற்போது ஆளுநர் கலையம்போல் உருண்டு கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்பதுபோல் கிண்டலடித்தார் சீமான்.

முன்பெல்லாம் பட்டமளிப்பு விழா, பதவியேற்பு விழாக்களில்தான் ஆளுநரையே பார்ப்போம் என சீமான் கூற, அதற்கு செய்தியாளர் ஒருவர், ஆளுநர் அமைதியாக இருப்பதுதான் அழகு என கூறுகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு 8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு ஒத்துழைக்காமல், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு ஆளுநர் ஏன் கையெழுத்து போடவில்லை? எல்லாம் கமிஷன்தான் விளையாடுகிறது என சைலண்ட்டாக இன்னொரு முறை நமட்டு சிரிப்பு சிரித்தார்.

வல்லபாய் பட்டேலுக்கு எதற்காக 3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வச்சாங்க, நாட்டின் பெருமை காந்தியா? அம்பேத்கரா? வல்லபாய் பட்டேலா? என கொதித்த சீமான், இந்தியாவை தாண்டி வல்லபாய் பட்டேலை ஒரு பயலுக்கும் தெரியாது? வெறும் வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது என்றார்

 


Share :        





VISITORS : 363108