Big Stories

அம்மாடியோவ்... பார்த்து பார்த்து கல்யாணம் ஹன்சிகாவின் டிரெஸ் இவ்வளவு விலையா?

        235

நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விர்ச்சுவல் விருந்து படைத்து வரும் நிலையில், திருமணத்தில் நடிகை ஹன்சிகா அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள் பற்றிய விபரமும், விலையும் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

குட்டி குஷ்பூவாக வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு கல்யாணம் ஆகிருச்சே என்று சோகத்தில் துவண்டு போயிருக்கும் ரசிகர்களை மேலும் சோக கடலில் மூழ்கடிக்கும் வகையில் ஹன்சிகாவின் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.

பொதுவாகவே, திரை பிரபலங்களின் திருமணம் என்றாலே, அவர்கள் என்ன மாதிரியான ஆடைகள் அணிந்திருக்கிறார்கள் என்பது மிகவும் கவனிக்கப்படும். அப்படிதான், நடிகை நயன்தாராவின் திருமண லுக் கூட மிகவும் பிரபலமாகி பல பேர் அதையே ரீமேக் பண்ணி ரீல்ஸ் மேக் செய்து அப்லோடு செய்து வந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா - தொழிலதிபர் சுஹைல் கதூரியா திருமணம் ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர் பேலஸில் பாரம்பரியம் மாறாமல் அதே நேரம் ஸ்டைலாகவும் நடந்தேறியது. திருமண நிகழ்வுகளில் நடிகை ஹன்சிகா அணிந்திருந்த ஆடைகள், அதற்கு மேட்சான அணிகலன்கள் கவனம் பெற்றுள்ளன. ஹன்சிகாவின் திருமண ஆடையை பார்த்த ரசிகர்கள் அந்த ஜெய்ப்பூர் பேலஸின் மகாராணி போல் இருப்பதாக சில்லறையை சிதறவிட்டு, சிலிர்த்து வருகின்றனர்.

நடிகை ஹன்சிகா திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்த நிலையில், அதில் கைகளாலேயே எம்பிராட்ய்டரி போட்டு தங்கம் பதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலையும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என சொல்லப்படுகிறது. லெஹாங்காவுக்கு மேட்சாக முழுக்க முழுக்க எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துப்பட்டாவும் தங்க நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமகள் ஹன்சிகாவுக்கு ஏற்றவாறு எம்ப்ராய்டரி ஐவரி ஷெர்வானியுடன் பழுப்பு நிற துப்பட்டாவை அணிந்திருந்தார் சுஹைல் கதூரியா.

அணிகலன்களைப் பொறுத்தவரை, நடிகை ஹன்சிகா கனமான கல் பதித்த நெக்லஸ், தோடு, நெத்திச்சூடி அணிந்திருந்தார். ஹன்சிகாவின் மெஹந்தி அணிந்த கைகளில் அசத்தலான தங்கக் கலரி தாராளமாக தொங்கியது. இந்த கற்களில் இடையிடையே வைர கற்களிலும், முத்து, பவளம் போன்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

திருமணத்திற்காக நடிகை ஹன்சிகா, மகாராணி போல் பூச்செடி தோரணங்களுக்கு இடையே அழைத்து வரப்பட்டது, சுஹைல் கதூரியா ஹன்சிகாவுக்கு மாலை போட்டதும் பேலஸ் முழுவதும் பட்டாசுகள், கலர் கலர் மின்விளக்குகளால் ஜொலித்தது என திருமணம் முழுவதும் திருவிழா போல் களைகட்டியது.

இதேபோல, சங்கீத் விழாவுக்கும் நடிகை ஹன்சிகா பிங்க் நிறத்தில் லெஹங்கா அணிந்திருந்தது பஞ்சுமிட்டாய்க்கு ஆடை அணிவித்தது போல் பொலிவாக இருந்தது. அத்தோடு கூடுதலாக வைரம் பதித்த அணிகலன்கள் ஹன்சிகாவின் அழகிற்கு மேலும் மெருகூட்டின.


நலங்கு நிகழ்விலும் ஹன்சிகாவும், சுஹைலும் பொருத்தமான உடை மற்றும் அலங்காரத்தில் ஒளிர்ந்தனர். ஹன்சிகா பூக்கள் அச்சிடப்பட்ட வெளிர் மஞ்சள் நிற உடையை மெல்லிய துப்பட்டாவுடன் நெக்பீஸ், காதணி, நெத்திச்சூடி மற்றும் வளையல்கள் அடங்கிய மலர் அணிகலன்களுடன் ஹன்சிகா தனது ஹால்டி விழாவில் தோன்றி பிரமிக்க வைத்தார். அத்தோடு பிரீ வெட்டிங் போட்டோஷூட்டிற்காக நடிகை ஹன்சிகா அணிந்திருந்த வெள்ளை நிற கவுன் ஏஞ்சல் போல் இருந்தது. ஆட்டம், பாட்டம், இசைக்கச்சேரி என ஹன்சிகாவின் கல்யாணம் நிறைவடைந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் தோழியின் கணவரையே திருமணம் செய்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் செய்திருப்பதாக விமர்சித்து வரும் நிலையில், பலர் வாழ்த்து மழையை குவித்து வருகின்றனர்.


Share :        

VISITORS : 363297