Big Stories

அமைச்சரின் அண்ணன் மகள் எடுத்த விபரீத முடிவு..! காரணம் என்ன? தீவிரமாகும் விசாரணை.!

        172

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சண்டையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவரின் துண்டு துண்டான உடல் பாகங்கள் கிடந்தன. போலீசார் அவற்றை கைப்பற்றி விசாரித்தபோது, திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி என்பது தெரியவந்தது.

அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரான துரை மகாலிங்கம் என்பவரின் மகள்தான் பாரதி. துரை மகாலிங்கம் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், 55 வயதான பாரதி, தனது கணவர் ராஜ்குமார், இரண்டு மகள்கள், ஒரு மகன் என குடும்பத்துடன் காட்பாடியில் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் அவரது உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பாரதி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கும் நிலையில், குடும்பப் பிரச்சனையா, வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Share :        





VISITORS : 363080