Big Stories

தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி.! பி.டி.ஆர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி.!

        189

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் எரிபொருள் விலை தாமாகக் குறையும் என்றும் ஆனால் அப்படி குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் கடந்த 200 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வரும் நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதற்கு இணையாக குறையாமல் இருக்கிறது என்றும் இந்தியாவில் சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதுபோல உள்ளது, என்றும் கூறியிருந்தார்.

அமைச்சரின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். அது தொடர்பான தனது டிவிட்டர் பதிவில், பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் என்றும் ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 


Share :        





VISITORS : 363134