ஆர்டர் செய்ததோ அழகிய புடவை..!கைக்கு வந்ததோ கிழிசல்கள்..!ஷாக் ஆன பெண்..!

        93

ஆசை ஆசையாய் புடவையை ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு கிழிந்த துண்டு துணிகளை பாக்கெட்டில் அடைத்து பக்காவாக பேக் செய்து அனுப்பி வைத்துள்ளது மீசோ ஆன்லைன் செயலி நிறுவனம்....நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் மீசோ ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள புடவையை ஆன்லைன் வாயிலாககே பணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த 11ம் தேதியன்று புடவையானது கொரியர் மூலம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.ஐ..ஜாலி.. ஆர்டர் செய்த புடவை வந்து விட்டது என்ற ஆசையில் பார்சலை திறந்து பார்த்த உஷா சற்றே அதிர்ந்து போனார். ஏனென்றால் வந்த பார்சலில் புடவை கிழிந்தும் தரமில்லாமலும் இருந்தது தான் அதற்கு காரணம்...

அதுமட்டுமல்ல, ஃபோட்டோவில் இருந்த புடவைக்கும் கையில் டெலிவரி செய்யப்பட்ட புடவைக்கும் பெரும் வித்தியாசம் இருந்ததால் மீசோ ஆன்லைன் செயலி நிறுவனத்தை தொடர்பு கொண்ட உஷா புகார் அளித்ததுடன் புடவையை மாற்றித்தருமாறு கோரியுள்ளார்.



இதையடுத்து கிழிந்த புடவையை மறுநாளே மீசோ ஆன்லைன் செயலி நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பிய உஷாவுக்கு, கடந்த 21 ஆம் தேதி மாற்று புடவை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறை சுதாரித்துக்கொண்டு சற்று உஷாரான உஷா, பார்சலை பிரிக்கும் முன்னர், ஆதாரம் ரொம்ப முக்கியம் என்றவாறு அதனை வீடியோவாகவும் பதிவு செய்ய தொடங்கினார்.ஆனால் உஷாவுக்கு காத்திருந்ததோ மீண்டும் ஒரு அதிர்ச்சி.. கடந்த முறையாவது புடவை கிழிந்து வந்தது, ஆனால் இந்த முறை கிழிசல் துண்டுகளே புடவை என்ற பேரில் வந்தது தான் வேதனை....

கிழிந்த துண்டு துணிகளை பாக்கெட்டில் அடைத்து பக்காவாக பேக் செய்து உஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர் மீசோ ஆன்லைன் செயலி நிறுவனத்தினர்...இது என்னடா கொடுமை..

ஒரு புடவையை ஆர்டர் செய்தது குத்தமாடா என்ற தொனியில் மீண்டும் மீசோ ஆன்லைன் செயலி நிறுவனத்தை நாடியிருக்கிறார் உஷா... அதுமட்டுமா இதே மஞ்சூர் பகுதியில் ஆன்லைன் மூலம் செல்போன் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதில் வெறும் கவர் மட்டும் வந்துள்ளது...

ஆன்லைனில் பொருட்களை பார்த்து ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு அந்நிறுவனங்கள் தரமற்ற பொருட்களை டெலிவரி செய்வதும்... எக்ஸ்ட்ரா லைட்டு போட்டு ஜொலிப்புடன் ஆடைகளை காட்டி மக்களின் ஆசையை தூண்டி விட்டு, பின் பணம் கிடைத்ததும் தரமற்ற ஆடைகளை அனுப்பி வைப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் மோசடிகள் அரங்கேற்றப்படுவது தடுக்கப்படுமா...இந்த பூனைக்கு மணி கட்டப்போது யார் என்ற கேள்வியோடு... நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக அனிதா...


Share :        





VISITORS : 348929