திரையில் மிரட்ட வரும் காமெடி ஜோடி..!"பரிதாபங்கள்" கோபி -சுதாகர் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை

        72

பிரபல யூடியூபர்களான கோபி- சுதாகர் இணையின் புதிய பட பூஜை சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. பரிதாபங்கள் என்ற பெயரிலான யூடியூப் சேனலில் இந்த இருவரின் சேட்டைகள் பலரையும் ரசிக்கவைத்து, சிரிக்கவைத்து வருகிறது. இந்த வெற்றி ஜோடி தற்போது திரைப்படம் ஒன்றில் நடிக்கிறது. அதற்கான பூஜை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. விக்னேஷ் எஸ்.சி.போஸ் தயாரிப்பில் விஷ்ணு விஜயன் இயக்கத்தில் இப்படம் தயாராக உள்ளது. கதாநாயகியாக வின்ஸு ரேச்சல் சாம் நடிக்கிறார்.


Share :        

VISITORS : 349049