கேடிஎம் நிறுவனம் தனது 2023 கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கேடிஎம் தனது 2023 கேடிஎம் அட்வெஞ்சர் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸனை பொருத்தியுள்ளது. இதன் விலை ரூ3.60 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3டி ஐஎம்யூவுடன் கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் இடம் பெற்றுள்ளது. இதில் க்விக் ஸிவிஃப்டர்+, லீன் ஆங்கில் சென்சிடிவ் கார்னரிங் ஏபிஎஸ், ரோடிங் மோட்கள், ஆஃப் ரோடு ஏபிஎஸ், ரைடு பை வயர் டெக்னாலஜி, எல்இடி ஹெட்லைட்கள், அப்சைடு டவுண் ஃபோர்க், சைடு மவுண்டட் எக்ஸாஸ்ட் சிஸ்டம், 46 மிமீ த்ராட்டல் பாடி, ஸ்லிப்பர் கிளட்ச், ஆஃப் பங்சன்களுடன் கூடிய 5 இன்ச் கலர்டு டிஎஃப்டி டிஸ்பிளே, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் .ந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.