Auto-Mobiles

எங்களுக்கு பெட்ரோலே வேணாம்.. கூட்டுறவு பெட்ரோல் பங்க் நோட்டீசால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி|

        39

திருவாரூரில் கூட்டுறவு பெட்ரோல் பங்க் வாசலில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற இயலாது என நோட்டீஸ் அடித்து ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் பெட்ரோல் பங்குகளில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் நகர் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற இயலாது என நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட முடியாமல் திரும்பி சென்றனர்.


Share :        





VISITORS : 790634