கன்னியாகுமரி அருகே நடைபெற்ற பாகவதமேளா விழாவில், 1300 சிறுமிகளை தேவிகளாக அலங்கரித்து வினோதமான கன்னிகாபூஜை நடைபெற்றது. மார்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷனின் 1300 சிறுமிகளுக்கு, பட்டு புத்தாடை அணிவித்து, திலகமிட்டு, ஆரத்தி எடுத்து, பூக்களால் அலங்கரித்து, சிறுமிகளை தேவிகளாக பாவித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பள்ளி செல்ல புத்தக பை ,பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, அலங்காரம் செய்யப்பட்ட சிறுமிகள் செண்டைமேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.