ஆன்மீகம்

உண்டியலில் தவறி விழுந்த தங்க செயின்.. பதறிபோன பக்தர்.. அறங்காவல் குழுவினர் செயலால் நெகிழ்ச்சி

        36

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், இரண்டு சவரன் தங்கச் செயினை தவறுதலாக போட்ட கேரளாவை சேர்ந்த பக்தருக்கு, கோயில் அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் வாங்கிய இரண்டு சவரன் தங்க சங்கிலியை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பக்தர், மலைக்கோயில் உண்டியலில் துளசி மாலையை கழற்றி செலுத்தியபோது அத்துடன் அணிந்திருந்த சுமார் 2 சவரன் தங்கச் செயினையும் தவறுதலாக உண்டியலில் செலுத்தி விட்டார். இதனையடுத்து அவரது ஏழ்மை நிலையை அறிந்த கோயில் அறங்காவலர் குழுவினர், சொந்த செலவில் புதிய செயினை வாங்கி பெண் பக்தரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share :        





VISITORS : 790861