சினிமா

கைநிறைய கிடைக்கும் பணமா? புருஷனா? சிக்கலில் சீதா ராமன் சீரியல் பிரியங்கா...

        36

மீண்டும் கைகூடிய காதல்.. சர்பிரைஸ் திருமணம்.. சீதாராமன் சீரியலில் நல்ல சம்பளத்தில் கமிட்டான நேரம்.. பிரியங்கா நல்காரிக்கு இனி எல்லாமே நல்லநேரம்தான் என சின்னத்திரையே சிலாகித்து கொள்ள.. சீதாராமன் சீரியலில் இருந்து பிரியங்கா விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளதால் சீரியல் விசிறிகள் எல்லாம் கடும் அப்செட்டில் உள்ளனர்...


சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழகத்தில் பலரது வீடுகளில் வலம் வந்த பிரியங்கா நல்காரி தொழிலதிபர் ராகுல் என்பவரை காதலித்தார். அமுலு.. அமுலு.. என தன் பின்னால் குட்டிபோட்ட பூனைபோல் சுற்றி சுற்றி வந்த ராகுலை கண்டுகொள்ளாமல் தட்டிக் கழித்தார் பிரியங்கா. போன், எஸ்எம்எஸ் என அத்தனையிலும் சரியாக ரெஸ்பான்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் மலேசியாவுக்கு சென்ற ராகுல் பிசினஸில் கவனம் செலுத்தினார். பிசினஸ் நினைத்ததைவிட சூடுபிடிக்க தனது இன்னிங்ஸை கையில் எடுத்த ராகுல் அமுலுவை AVOID செய்ய ஆரம்பித்தார்..


அய்யோ நாம் வீசிய பந்து நமக்கே திரும்பி வருகிறதே என உஷாரான பிரியங்கா ஒரு சினிமா ஏஜெண்ட் மூலம் ராகுலை டிராக் செய்து, வாரணம் ஆயிரம் சூர்யாபோல மலேசியாவுக்கு பறந்து சர்பிரைஸ் கொடுத்ததோடு, ஹஸ்பண்டாக புரோமோஷனையும் கொடுத்து டபுள் டமாக்காவில் மிதக்க வைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் கோபத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அமுலுவை அலேக்காக அள்ளிச் சென்று மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்.


திருமணம் முடித்த கையோடு மீண்டும் சென்னை வந்த பிரியங்கா, ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீதாராமன் சீரியலில் கமிட்டானார். மீண்டும் கைகூடிய காதல், சர்பிரைஸ் திருமணம், நல்ல சம்பளத்தில் சீதாராமன் சீரியல்.. பொண்ணுக்கு நல்ல நேரம் கூடிவிட்டது.. இனி எல்லாமே வெற்றிதான் என சின்னத்திரை உலகமே பேச தொடங்கியது..


இந்நிலையில் சீதா ராமன் சீரியலில் இருந்து பிரியங்கா நல்காரி விலகுகிறார் என்ற இடியை இறக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கு காரணமே காதல் கணவர் ராகுல் மற்றும் அவரது பெற்றோர்கள்தானாம் என்கின்றனர் சீரியல் யூனிட் ஆட்கள். கைநிறைய சம்பாதிக்கும் பிரியங்கா அத்தனை பணத்தையும் போக்குவரத்து செலவு, மேக்கப் என இஷ்டத்திற்கு செலவு செய்வதாகவும், அவரை அடக்கி கைக்குள் வைக்கவே கணவர் வீட்டார் இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது.


திருமணம் ஆனதிலிருந்தே வாரத்திற்கு நான்கைந்து முறை மலேசியா சென்று வந்த பிரியங்கா.. ஏர்போர்ட்டிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர.. மீண்டும் ஏர்போர்டுக்கு செல்ல என பிரைவேட்டாக கார் கேட்டு கெடுபிடி காட்டி உள்ளார்.. சீதா ராமன் சீரியலே இவரால்தான் நல்ல ரேட்டிங்கில் உள்ளது என்பதால் அத்தனை அலப்பறையையும் பொறுத்துக்கொண்ட சீதாராமன் யூனிட், ஒரு நாளைக்கு 30 ஆயிரம் சம்பளம், பிரைவேட் கார் என சகல வசதிகளும் செய்து கொடுத்துள்ளனர்..


இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் என் அப்பனுக்கு பிடிக்கலே ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலே என்ற டயலாக்போல என கணவர் வீட்டாருக்கு பிடிக்கலை என பிரியங்கா காரணம் கூறி உள்ளது சீரியல் யூனிட் ஆட்களுக்கு கடுப்பை கிளப்பி உள்ளதாம்..


இதுஒருபுறமிருக்க.. ஒரு நாளைக்கு 30 ஆயிரம் என்றால், கார், பேட்டா என மாதம் 10 லட்சம்வரை சம்பாதித்து ஸ்டார் நடிகையாக வலம்வரும் பிரியங்கா சீரியலைவிட்டு விலகுகிறாரா? இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்..


Share :        

VISITORS : 790864