சிங்கப்பூரில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 9 நாள் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், முதலில் சிங்கப்பூர் சென்று, பல்வேறு நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையம் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலினை இந்திய இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார்.