தமிழ்நாடு

"இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது" NCPCR உறுப்பினர் பரபரப்பு பேட்டி

        5

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பெண் பிள்ளைகளுக்கு, கன்னித்தன்மையை உறுதிப்படுத்தும் இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கூறியுள்ளார். நமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமிகளுக்கு இருவிரல் சோதனை நடந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது உண்மை எனவும், சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் குறிப்பிட்டார். கன்னித்திரை சேதம் அடையவில்லை என போலீசார் அறிக்கையில் உள்ளதை சுட்டிக்காட்டிய, சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், குழந்தை திருமணம் நடைபெறாத போது நடந்ததாக மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


Share :        

VISITORS : 790842