தொழில்நுட்பம்

ரிலையன்சின் வருடாந்திர பொது நிர்வாக கூட்டம்

        231

இன்று நடக்கும் ரிலையன்சின் வருடாந்திர பொது நிர்வாக கூட்டத்தில், பல முக்கிய அறிவிப்புகளை அதன் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய தலைவர் வரும் டிசம்பர் மாதம் பொறுப்பேற்பார் என முகேஷ் அம்பானி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவரது மூன்று வாரிசுகளில் யார் தலைவராக வருவார் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

5ஜி சேவை வரும் அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கும் என தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். 5ஜி ஏலத்தில் அதிக தொகைக்கு அலைக்கற்றைகளை வாங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.

இன்று நடக்கும் கூட்டத்தில் 5ஜி செயல்முறைகள் சிலவற்றை முகேஷ் அம்பானியின் மகன்கள் நடத்திக் காட்டுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. ரிலையன்சின் சோலார் மின்திட்டங்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் இன்று வெளியாகலாம்.


Share :        

VISITORS : 348953