வர்த்தகம்

தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.352 குறைவு

        264

தங்கத்தின் விலையில் இன்று சவரனுக்கு 352 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று 4 ஆயிரத்து 754 ரூபாய்க்கு விற்கப்பட்ட 22 காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை, இன்று 44 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 710 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதேபோல் நேற்று 38 ஆயிரத்து 32 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் இன்று 352 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 58 ரூபாயாகவும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 58 ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்படுகிறது.


Share :        

VISITORS : 349083