இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்களின் டீசர்களை கார் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியிடுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள Honda Accord கார் மற்றும் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள இன்னோவா ஹைக்ராஸ் காரின் டீசர் புகைப்படங்கள் கார் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஏராளமான கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அந்த கார்களின் டீசர் புகைப்படங்கள்தான் இவை...நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அந்தவகையில் இந்தாண்டு இறுதிக்குள் எம்.ஜி மோட்டார் நிறுவனம் புதிய ஹெக்டர் எஸ்.யூ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் டீசர் புகைப்படங்களை எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிய எம்.ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் 14 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அடுத்த தலைமுறை ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகமுக்கிய வசதியாக ADAS (Advanced Driver Assistance System) இந்த காரில் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்சி பிரேக்கிங், கிருஸ் கண்ட்ரோல், லேன் அஸ்சிஸ்ட், ஹை பீம் அஸ்சிஸ்ட் போன்ற வசதிகளும் உள்ளன.
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் என்ற பெயரில் புதிய காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இன்னோவா ஹைக்ராஸ் கார் இந்தோனேசியாவில் முதலில் அறிமுகமாகிறது.
நவம்பர் மாதம் அல்லது 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
சமீபத்தில் டொயொட்டா அறிமுகம் செய்த அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இன்னோவா ஹைக்ரஸை அறிமுகம் செய்யவுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இதை தொடர்ந்து இந்த காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
விரைவில் இந்த வெர்ஷன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன்களை மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது.
அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள Honda Accord காரின் டீசர் புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
HONDA ACCORD காரில் 12.3 இன்ச் அளவில் பெரிய தொடுதிரை வசதிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த 11th generation காரில் பல அதிநவீன புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. Honda Accord காரின் டீசர் புகைப்படங்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது.
இதேபோன்று இந்தாண்டு இறுதிக்குள் வோக்ஸ் வேகன் போலோ, ஸ்கோடா ஃபாபியா, உள்ளிட்ட ஏராளமான பட்ஜெட் கார்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.