ட்விட்டரில் BLUE TICK பெற்ற பக்கங்களை வைத்திருப்பவர்களிடம் இந்திய மதிப்பில் மாதம் தோறும் சுமார் ஆயிரத்து 600 ரூபாய் கட்டணம் வசூலிக்க அந்நிறுவனத்தை வாங்கி உள்ள டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.
பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் நிர்வகிக்கப்படுவதை தவிர்க்கவும், உண்மையான ட்விட்டர் பக்கத்தை அடையாளம் காணும் வகையிலும் வெரிஃபைடு பக்கங்களுக்கு புளூடிக் கொடுக்கப்படுகிறது.
இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த இந்த வசதிக்கு இனிமேல் ட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் புளுடிக் வசதி நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.