Auto Mobiles

டெலிவரி நிறுவனங்களுக்கு 50 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.! பிகாஸ், கோ சாப் நிறுவனங்கள் இணைந்து திட்டம்.!

        125

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி மையத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பிகாஸ் (BGAUSS), கோ சாப் (GO SHOP) நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு 50 பேட்டரி இரு சக்கர வாகனங்களை வழங்கியது.

டெலிவரி வழங்கும் ஊழியர்கள் அதிக தொலைவு வாகனம் ஓட்டுவதால் பேட்டரி சார்ஜ் செய்யும் சிக்கலை தவிர்க்க, செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பேட்டரி சார்ஜ் முடியும் தருவாயில் பதிவிட்டு தகவல் தெரிவித்தால் கோ சாப் நிறுவனம் உடனடியாக பேட்டரியை வழங்கி அவர்களது பணி பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share :        





VISITORS : 349010