Auto-Mobiles

கிரிஸ்டாவை பின்னுக்கு தள்ளிய | டொயோட்டா ஹைகிராஸ்.!

        290

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டாவின் புதிய மாடலான இன்னோவா ஹைகிராசின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி உள்ளது.

50 ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்கிங் செய்பவர்களுக்கு வரும் ஜனவரியில் வண்டி டெலிவரி செய்யப்படும் என டொயோட்டா கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளது.

இப்போது டொயோட்டாவின் டாப் மாடலாக இருக்கும் இன்னோவா கிரிஸ்டாவுடன் ஒப்பிடும் போது ஹைகிராஸ் முற்றிலும் வேறுபட்ட பிளாட்பார்மில் தயாராகிறது. டொயோட்டாவின் TNGA-C: GA-C platformல் உருவாகும் ஹைகிராஸ், வழக்கமான லேடர் ஆன் பிரேம் பாடிக்குப் பதிலாக monocoque அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கிரிஸ்டாவை விட ஹைகிராசின் எடை 200 கிலோ குறைவாக இருக்கும். அது மட்டுமின்றி front-wheel drive model மாடலில் அது வருகிறது.

கிரிஸ்டாவை விட 20 மில்லி மீட்டர் நீளம் அதிகமாகவும், 15 மில்லி மீட்டர் அகலம் அதிகமாகவும் ஹைகிராஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீல் பேஸும் கிரிஸ்டாவை விட 100 மில்லி மீட்டர் அதிகம். கிரிஸ்டாவை விட சற்று உயரமான பேனட், வீல் வளைவுகள் மற்றும் பவர் டிசைனில் ஹைகிராஸ் வருகிறது.

7 மற்றும் 8 சீட்கள் ஆப்ஷன் உள்ளது. முதல் வரிசை சீட்கள் வென்டிலேட்டட் மாடலில் இருக்கும். நடுவரிசை சீட்டுகளை பவர் ஓட்டோமேன் சீட்களாக மாற்றிக் கொள்ளவும் ஆப்ஷன் உள்ளது.

டொயோட்டாவின் Safety Sense 3.0 என்ற பாதுகாப்பு அம்சத்தை ஹைகிராஸ் வாயிலாக டொயோட்டா இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது.

2 லிட்டர் நான்கு சிலிண்டர் ஹைபிரிட் பெட்ரோல் எஞ்சினுடன், e CVT மற்றும் regular CVT automatic பவர்களில் ஹைகிராஸ் இருக்கும். பெட்ரொல் எஞ்சினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களும் இருப்பதால், மைலேஜ் லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பதே விநாடிகளில் பூஜ்யத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை ஹைகிராஸ் தொடும் என டொயோட்டா கூறுகிறது. மஹிந்திரா XUV700 மற்றும் டாடா சபாரிக்கு பெரிய போட்டியாக இருக்கும் இந்த கார், மல்ட்டி பர்பஸ் வெஹிகிள் எனப்படும் MPV பிரிவில் டொயோட்டாவின் இடத்தை தொடர்ந்து உறுதி செய்ய உதவும் எனவும் கூறப்படுகிறது.

கியாவின் பிரிமியம் மாடலான கார்னிவலுக்கும் ஒருவேளை ஒரு optional மாடலாக ஹைகிராஸ் மாற வாய்ப்புள்ளது.

பனோரமிக் சன்ரூஃப், dual-zone climate control,10 புள்ளி 1 இஞ்ச் டச் ஸ்கிரீன், adaptive cruise control, lane-trace assist, auto high beam, blind spot monitor போன்ற நவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆட்டோ எல்இடி ஹெட்லாம்புகள், பிளாக் பேப்ரிக் சீட்டுகள், ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 16 இஞ்ச் வீல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

2 லிட்டர் பெட்ரோலில் G, GX என இரண்டு மாடல்களும், ஹைபிரிட் எஞ்சின் ஆப்ஷனில் VX ,ZX, ZX(O) ஆகிய மாடல்கள் வெளியாகின்றன. ஹைகிராசின் எக்ஸ் ஷோரூம் விலை 22 லட்சம் முதல் 28 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

 


Share :        





VISITORS : 790593