ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுக்கான டீசர் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் ஒன்பிளஸ் நிறுவனம், அடுத்தடுத்து தனது தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட் போன் அடுத்த ஆண்டு சீனாவிலும் பின்னர் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
128 ஜி.பி. INTERNAL STORAGE- மற்றும் 256 ஜி.பி. INTERNAL STORAGE ஆகிய இரண்டு வேரியண்டுகளில் வெளியாகும் இந்த போனின் டிஸ்பிளே 6.7இஞ்ச் என்ற அளவுக்கு இருக்கும்.
போனின் பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 32 மெகாபிக்சல் tertiary sensor கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் IMX890 பிரைமரி சென்சார் என மூன்று கேமராக்கள் இருக்கின்றன.
இதேபோல் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா இருக்கும் நிலையில், போனின் விலை குறித்த தகவல் வெளியாகவில்லை.