இந்தியா

தென்னைமரத்தில் ஏறிய சிறுத்தைகள்.!! அலறிய கிராம மக்கள்

        123

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் இரண்டு சிறுத்தைகள் தென்னைமரத்தில் ஏறி அட்டகாசம் செய்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். குடிமண்டா பகுதியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்திற்கு வந்த இரண்டு சிறுத்தைகள், அங்கிருந்த தென்னைமரத்தில், ஏதோ தரையில் நடப்பது போல் வெகு அனாயசமாக ஏறியும், இறங்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். மேலும் சிறுத்தைகளின் அட்டகாசத்தை தூரத்திலிருந்து செல்போனில் படம்பிடித்துள்ளனர்.
 


Share :        

VISITORS : 348994